ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலைத் திரும்பி வருவதால் காஷ்மீரில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அங்கு வானியின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, பதற்றம் நீடித்து வந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. எனினும், முழு கடையடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் 79-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.