இந்தியா

காவிரி நதிநீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மறு சீராய்வு மனு

DIN


பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடக் கோரி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு இன்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவில், கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலவில்லை என்றும், தமிழகத்துக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடும்படி பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யவும் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீர் அம்மாநில குடிநீர் தேவைக்கே போதுமானதாக இருப்பதாகக் கூறி, அம்மாநில சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT