இந்தியா

நவாஸ் ஷெரீஃப் பேச்சை எந்த நாடும் ஆதரிக்கவில்லை: முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்

தினமணி

புது தில்லி: ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேச்சை எந்த நாடும் ஆதரிக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் கே.நட்வர் சிங் கூறியுள்ளார்.
தில்லியில் இந்த விவகாரம் தொடர்பாக நட்வர் சிங் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டாகிவிட்டது. எனினும், இதுவரை பிரச்னை தீரவில்லை. நான் இப்போதைய பிரச்னையைப் பற்றி பேசவில்லை, கடந்த 70 ஆண்டுகளாக நீடித்து வரும் ஒட்டுமொத்த பிரச்னைகள் குறித்தும் பேசுகிறேன்.
இப்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக உள்ள பகுதியை சர்வதேச எல்லையாக மாற்றுவதுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக அமையும். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள அனைத்துப் பிரச்னைகளும் முடிவுக்கு வரும். இதைத் தவிர வேறு தீர்வு இல்லை.
நான் இப்போது கூறுவது அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் சாத்தியமாக வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானும் அணு ஆயுத நாடாகிவிட்டதால், அதனுடன் நாம் போருக்குச் செல்ல முடியாது. உரி தாக்குதல் உள்பட இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பு கூறும் கருத்துகளை ஏற்க முடியாது.
இந்தியா மீது தொடரும் பயங்கரவாதத் தாக்குதல்களால் நமது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நியாயமானதுதான். ஆனால், பாகிஸ்தானுடன் போருக்குச் செல்வது இதற்குத் தீர்வாக அமையாது. போர் நடத்தும் முடிவை இந்தியா எடுக்காது என்று நான் நம்புகிறேன்.
ஐ.நா.வில் பாகிஸ்தானை நாம் தனிமைப்படுத்தியுள்ளோம். ஐ.நா.வில் அந்நாட்டுப் பிரதமரின் பேச்சை எந்த நாடும் ஆதரிக்கவில்லை. முஸ்லிம் நாடுகள் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றார் நட்வர் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT