இந்தியா

திருப்பதியில் கோர விபத்து: டீக்கடைக்குள் லாரி புகுந்ததில் 15 பேர் பலி; 10 பேர் படுகாயம்

DIN


திருப்பதி: திருப்பதியில் சாலையோரக் கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சித்தூர் மாவட்டம் எர்பேடு காவல்நிலையத்துக்கு வெளியே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

காளஹஸ்தி அருகே எர்பேடுமண்டலத்தில், சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

இதில், காவல்நிலையத்துக்கு பல்வேறு புகார்களின் கீழ் மனு கொடுக்க வந்தவர்களும் டீக்கடையில் இருந்தவர்களும் என 15 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில துணை முதல்வர், திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு, விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

லாரியின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT