இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா தளபதியை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது

DIN

சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி அபு துஜானா இந்திய ராணுவத்தால் செவ்வாய்கிழமை சுட்டு வீழ்த்தப்ப்ட்டான். 

இதனை உறுதி செய்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ட்விட்டரில் கூறியதாவது:

பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி அபு துஜானா, ஹக்ரிபூரா புல்வாமா என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான். இது இந்திய பாதுகாப்புப் படைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்றனர்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தேடப்படும் முக்கியமான 12 பயங்கரவாதிகளின் விவரத்தை இந்திய ராணுவம் வெளியிட்டது. அதில், அபு துஜானாவும் இடம்பெற்றுள்ளான்.

2017-ம் ஆண்டில் இதுவரை மட்டும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் 95 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. அதில் இதுபோன்ற குறிப்பிட்ட முக்கிய பயங்கரவாதிகளும் அடங்குவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT