இந்தியா

நடப்பு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிப்பு 

DIN

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:

2015-16-ம் நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 2,26,97,843 ஆகும். அதன் வளர்ச்சி 24.7 சதவீதம் ஆகும். 

ஆனால், 2016-17-ம் நிதி ஆண்டில் ஆகஸ்ட் 5-ம் தேதி வரையில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 2,82,92,955 ஆக அதிகரித்துள்ளது. 

மொத்தம் 25.3 சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இதன்மூலம் நடப்பு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 9.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் 41.79 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல தானாக முன்வந்து வருமான கணக்கை தாக்கல் செய்வோர் எண்ணிக்கையும் 34.25 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் கறுப்பு பண பதுக்கலை ஒழிக்க வகை செய்யப்பட்டது என்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT