இந்தியா

வாகனத்தை நிறுத்தி செல்ஃபி எடுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. 

DIN


குவகாத்தி: அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தில் பயணிப்போர், தங்களது வாகனத்தை நிறுத்தி செல்ஃபி எடுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காம்ரூப் மாவட்ட நிர்வாகம் இந்த எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரம்மபுத்திரா மீது கட்டப்பட்டுள்ள இவ்விரு மேம்பாலங்களும் பாதுகாப்புக்குட்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மேம்பாலங்களில் செல்ஃபி எடுத்துக் கொள்வதும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலங்களில் வாகனங்கள் நிறுத்தப்படக் கூடாது என்றும், 'நோ செல்ஃபி ஸோன்' ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

செல்ஃபி எடுப்பதற்காக பல வாகனங்கள் இந்த மேம்பாலங்களில் நிறுத்தப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உண்டானதை அடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT