இந்தியா

ஹரியானா ஐஏஎஸ் மகள் விவகாரம்: பாஜக தலைவர் மகன் கைது

DIN

ஹரியானா மாநிலத்தின் சண்டிகரில் காரில் சென்ற பெண் ஒருவருக்கு மற்றொரு காரில் வந்த ஆண்கள் சிலர் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், அந்தக் காரில் வந்தப் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் என்பது தெரியவந்தது. அதுபோல அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர்கள் அம்மாநில பாஜக தலைவரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் ஆவர்.

இதையடுத்து, தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகள் என்பதால் இதிலிருந்து எளிதாக தப்பிக்க முடிந்தது. இதுவே ஒரு சாதாரண மனிதனின் மகள் என்றால் அவள் நிச்சயம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பாள் என்று  அந்தப் பெண் பேட்டியளித்தார். தன்னை கடத்த திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் பாஜக தலைவருக்கு தொடர்பில்லை எனவும் அவரது மகன் தான் இதற்கு காரணம் என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. இதனால் அவர்கள் அனைவரும் நேரில் ஆஜராகினர். காவல்துறை அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. 

பின்னர், இளம்பெண் கடத்தல் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT