காவிரிப் பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு ஏற்படும் என்று கர்நாடக உணவுத் துறை அமைச்சர் யு.டி.காதர் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதன்கிழமை நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற யு.டி.காதர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் 42 ஆண்டுகளில் இல்லாத வறட்சியைச் சந்தித்து வருகிறோம். இதனால் காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே குழப்பம் இருந்து வருகிறது. இது தாற்காலிகப் பிரச்னைதான். இந்தப் பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு ஏற்படும். தமிழக, கர்நாடக மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பிராந்திய மொழிகளைக் காக்க வேண்டியது அவசியம். கன்னடம் மாநில மொழி. ஹிந்தி தேசிய மொழி. ஆங்கிலம் சர்வதேச மொழி. கலாசாரத்தைத் தெரிந்துகொள்ள தாய்மொழியை அனைவரும் கட்டாயம் கற்க வேண்டும்.
ஹிந்தியைத் திணிக்க பாஜக முயற்சிக்கிறது. மொழிப் பிரச்னையில் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.