இந்தியா

தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் நக்ஸல் தடுப்பு போலீஸார் தீவிர ரோந்து

DIN

தமிழக - ஆந்திர எல்லையோரப் பகுதியான பென்னாலூர்பேட்டை, அல்லிக்குழி, பூண்டி வனப்பகுதிகளில் நக்ஸலைட்டுகள் ஊடுருவலைத் தடுக்க நக்ஸல் தடுப்பு சிறப்புப் படையினர் கடந்த சில நாள்களாக தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக - ஆந்திர எல்லையில், திருவள்ளூர் மாவட்டம் வழியாக நக்ஸல்கள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழக, ஆந்திர எல்லைப் பகுதிகளான பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்பாடி, அல்லிக்குழி, பென்னாலூர்பேட்டை, சென்றாயன்பாளையம், குடியம், பூண்டி ஆகிய வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக நக்ஸல் தடுப்பு சிறப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட நக்ஸல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஜெயக்குமார், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், போலீஸார் உள்பட 13 பேர் கொண்ட தனிப்படையினர், துப்பாக்கி ஏந்தியபடி கண்காணித்து வருகின்றனர்.
இதுவரை சந்தேகத்துக்கிடமாக யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் நக்ஸல்களின் ஊடுருவல் உள்ளதா என எல்லையோர கிராமப் பகுதிகளில் உள்ள மக்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து உடனுக்குடன் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மைக் காலமாக வனப்பகுதியில் மான்கள், முயல்கள், குள்ள நரி, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, உடும்பு மற்றும் கீரிப்பிள்ளை உள்ளிட்ட விலங்குகள், அரியவகைப் பறவையினங்கள் காட்டில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் வருகின்றன.
இதனால், காட்டுப் பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் இருக்கக்கூடும் என வனத்துறையினரும் சந்தேகமடைந்து ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT