புது தில்லி: பாஜகவைச் சேர்ந்த பைரோன் சிங் ஷெகாவத்துக்குப் பிறகு பாஜகவைச் சேர்ந்த இரண்டாவது தலைவர் ஒருவர் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்ய நாயுடு, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புது தில்லியில் வெகு விமரிசையாக நடைபெற்ற விழாவில், பட்டுவேட்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த வெங்கய்ய நாயுடு, குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த சூழ்நிலையில், குடியரசுத் துணைத் தலைவராக இருந்து பிறகு குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டவர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
சாகீர் ஹுசைன்
வரதகிரி வெங்கட்ட கிரி
இராமசாமி வெங்கட்ராமன்
சங்கர் தயாள் சர்மா
கோச்செரில் ராமன் நாராயணன்
இந்தத் தகவலுக்குப் பின்னால் பலரும் நினைப்பது போல் எந்த பின்னணியும் இல்லை. வெறும் வரலாறு மட்டுமே...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.