இந்தியா

கர்நாடகாவில் கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்கப் போராடிய ஆட்டோ ஓட்டுநர்

DIN


பெங்களூர்: கர்நாடக மாநிலம் யெஷ்வந்த்புரா ரயில் நிலையத்தில், சமூக விரோதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பத்திரமாக மீட்க உதவியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு யெஷ்வந்த் புரா ரயில் நிலையத்துக்கு வெளியே ஒரு இளம்பெண்ணுடன் ஒரு நபர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அந்த நபரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த அஸ்கர் பாஷா என்ற ஆட்டோ ஓட்டுநர், கீழே விழுந்து கிடந்த நபரை தூக்கி விசாரித்து, காவல்நிலையத்தில் சென்று சேர்த்தார். அவர் சொன்ன தகவல்களை வைத்து, சம்பவ பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்தார்.

அப்போது, பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் நபர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தியதும், அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு அவர்கள் சென்றதும் தெரிய வந்தது. உடனடியாக இது குறித்த காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்து, காவலர்களும், அஸ்கர் பாஷாவும் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டனர். அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

பெண்ணைக் கடத்தி துன்புறுத்திய ஒரு நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர், மற்றவர்கள் தப்பிவிட்டனர். விசாரணையில் மேலும் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார்.

காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் அஸ்கர் பாஷாவுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT