இந்தியா

பெங்களூரு வெள்ளம்: வாகனக் காப்பீடு நிறுவனங்களில் குவியும் இழப்பீடுக்கான விண்ணப்பங்கள்

DIN


பெங்களூர்: பெங்களூருவின் தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்கள் பலரும், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய தங்களது வாகனங்களுக்கு இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் கொட்டத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பெய்த கன மழை காரணமாக பெங்களூரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

இதில், சாலையில் மற்றும் வீட்டு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

அடுத்த நாள் தங்களது வாகனங்களை மெக்கானிக் கடைகளுக்கு கொண்டு சென்ற பெரும்பாலானோர், அடுத்து காப்பீட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்தனர்.

பெங்களூரில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டன. பல காப்பீடு நிறுவனங்கள், வாகனங்களை நிறுத்த இடமின்றி, வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருவதாகவும் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT