இந்தியா

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 116 பேர் நாளை பயணம்'

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள பூஞ்ச்- ராவலாகோட் இடையே கடந்த 1 மாதத்துக்கும் மேலாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தவித்துவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 116 பேர் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 116 பேர் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்படுவார்கள். அதேபோல், அங்கிருக்கும் 3 இந்தியர்கள் அதேநாளில் காஷ்மீர் திரும்புவார்கள்' என்றார்.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததை அடுத்து கடந்த மாதம் 10-ஆம் தேதி பூஞ்ச்-ராவலாகோட் இடையே பேருந்து சேவை நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT