இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: கர்னல் புரோகித்துக்கு ஜாமீன்

DIN

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்துக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
சில நிபந்தனைகளுடன் அவருக்கு இந்த ஜாமீனை வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டனர். இதில் பெண் துறவி சாத்வி பிரக்ஞா, ஹிந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை அரங்கேற்றுவதற்குத் தேவையான ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை ராணுவ கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித், ஹிந்து அமைப்புகளுக்கு வழங்கியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்தார். இதற்கு நடுவே, ஜாமீன் கோரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் புரோகித் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இறுதியாக புரோகித்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டனர்.
முன்னதாக, இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், இந்த வழக்கில் அரசியல் சூழ்ச்சியால் புரோகித் சிக்கவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT