முகப்பு
இந்தியா

முத்தலாக் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: பிரதமர் மோடி வரவேற்பு

முத்தலாக் முறை சட்ட அங்கீகாரமற்றது என்று உச்ச நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:


புது தில்லி: முத்தலாக் முறை சட்ட அங்கீகாரமற்றது என்று உச்ச நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த முத்தலாக் முறை மீதான தீர்ப்பு இஸ்லாமியப் பெண்களுக்கும் சம உரிமை வழங்க வகை செய்யும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இருந்த பெரும்பான்மையான நீதிபதிகள், முத்தலாக் முறை சட்ட அங்கீகாரமற்றது, அதற்கு எதிராக மத்திய அரசு 6 மாதத்துக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்துக் கருத்துக் கூறியுள்ள பிரதமர் மோடி, முத்தலாக் முறைக்கு எதிராக தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்லாமியப் பெண்களின் சம உரிமையை உறுதி செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →