இந்தியா

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திருப்பதியில் வழிபாடு

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது படேல் வெற்றி பெற்றதற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 42 பேர் திருப்பதியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் காலியாக இருந்த 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் போட்டியிட்டனர்.
மத்திய, குஜராத் மாநில பாஜக அரசுகள் அகமது படேல் வெற்றியை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் 44 எம்.எல்.ஏக்கள் பெங்களுரில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 42 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால் அகமது படேல் வெற்றி பெற்றார்.
பாஜகவின் முயற்சியையும் மீறி காங்கிரஸ் இந்த வெற்றி பெற்றதை அடுத்து, திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் செலுத்த குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் தீர்மானித்தனர்.
இதன் தொடர்ச்சியாக 42 எம்.எல்.ஏக்களும், அந்த மாநில நிர்வாகிகளும் திங்கள்கிழமை சென்னைக்கு வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து தங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றினர்.
திருப்பதியில் சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT