இந்தியா

ஜன்தன்-ஆதார்-செல்லிடப் பேசி எண் இணைப்பால் சமூகப் புரட்சி: ஜேட்லி

ஜன்தன், ஆதார், செல்லிடப் பேசி எண்கள் ஆகியவற்றை இணைப்பது நாட்டில் சமூகப் புரட்சிக்கு வழிவகுத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

DIN

ஜன்தன், ஆதார், செல்லிடப் பேசி எண்கள் ஆகியவற்றை இணைப்பது நாட்டில் சமூகப் புரட்சிக்கு வழிவகுத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து முகநூல் சமூக வலைதளத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் 100 கோடி - 100 கோடி - 100 கோடி என்ற இலக்கு எட்டிவிடும் தூரத்தில் உள்ளது.
அதாவது, 100 கோடி ஆதார் எண்களை, 100 கோடி வங்கிக் கணக்குகளுடனும், 100 கோடி செல்லிடப் பேசி எண்களுடனும் இணைப்பதே அந்த இலக்கு.
அந்த இலக்கு எட்டப்பட்டால், ஒட்டுமொத்த இந்தியாவே நிதி மற்றும் மின்னணு குடைக்குள் கொண்டு வரப்படும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே இந்தியா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதே போல், ஜன்தன் திட்டமும், ஆதார்-வங்கிக் கணக்கு-செல்லிடப் பேசி எண் ஆகியவற்றை இணைக்கும் திட்டமும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்பட அனைத்துப் பிரிவினரையும் ஒரே பொருளாதார, மின்னணு தொழில்நுட்ப வலைப் பின்னலுக்குள் கொண்டு வரும்.
அந்த வகையில், ஆதார்-ஜன்தன்-செல்லிடப் பேசி இணைப்பு இந்தியாவில் சமூகப் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று தனது முகநூல் பதிவில் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT