இந்தியா

குடியரசுத் தலைவருடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு

DIN


புது தில்லி: தமிழகத்தில் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வலியுறுத்தினர்.

திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டிகேஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி,  திருச்சி சிவா, இடது சாரி எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினர்.

அப்போது, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வகையில் சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்தனர்.

மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான வழக்குகள் மற்றும் தீர்ப்புகளையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT