இந்தியா

பாஜகவை எதிர்த்துப் போராட அரசியல் கட்சிகளை ராகுல் காந்தி காந்தம் போல் ஈர்ப்பார்

DIN

காங்கிரஸ் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட உள்ள ராகுல் காந்தி, பாஜகவைக் கூட்டாக எதிர்ப்பதில் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒரு காந்தம் போல் கவர்ந்திழுப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ராகுலின் பணிவு மற்றும் அடக்கமான பண்பு குறித்து அனைவருக்கும் தெரியும். ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வதில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை வைத்துப் பார்க்கும்போது, மற்ற கட்சிகள் நிச்சயம் அவருடன் ஒத்துழைக்கும். மதவாத அரசியலை நம்பாத, காங்கிரஸýடன் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கும் கட்சிகளை ராகுல் காந்தி ஒரு காந்தம் போல் ஈர்ப்பார். காங்கிரûஸ ஒருங்கிணைத்து வழிநடத்துவது மட்டுமின்றி, மதவாத சக்திகளை (பாஜக) எதிர்ப்பதில் ஒத்த கருத்துடைய கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படுவதை அவர் உறுதிசெய்வார்.
ராகுல் காந்தி பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்துள்ளார். ஆட்சி நிர்வாகம், கட்சி அமைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றில் அனுபவம் பெற்றுள்ள அவர், ஒரு திறன்வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவாஹர்லால் நேருவின் குணநலன்களை ராகுல் தன்னகத்தே கொண்டுள்ளார். குறிப்பாக இந்த தேசம், மதச்சார்பின்மை குறித்த அவரது லட்சியக் கண்ணோட்டம், சமூக நலன் சார்ந்த சிந்தனைகள் ஆகியவை அவரது கொள்ளுத்தாத்தா நேருவின் சிந்தனைகளைப் போல் அமைந்துள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது ராகுல் நினைத்திருந்தால் பிரதமராகியிருக்க முடியும். ஆனால் அவர் அப்பதவியை விரும்பாமல் காங்கிரஸ் கட்சி அமைப்பை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்துவதையே விரும்பினார். இது மிகச்சிறந்த பண்பாகும். அவர் நரேந்திர மோடியைப் போல் திடீரென்று தேசிய அரசியல் களத்துக்கு வந்தவரல்ல.
காங்கிரஸ் வாரிசு அரசியல் நடைமுறையில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு உண்மை என்றால் ராகுல் எப்போதோ பிரதமர் பதவிக்கு வந்திருக்க முடியும். ஆனால் அவர் தற்போது ஜனநாயக ரீதியில் (உள்கட்சித் தேர்தல்) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், பாஜகவில் அமித் ஷாவை கட்சித் தலைவராக்கிய நடைமுறையிலோ, நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு கொண்டு வந்ததிலோ ஓர் அங்குலம் அளவுக்காவது ஜனநாயகப் பாதை பின்பற்றப்பட்டதா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.
ராகுலைப் போலன்றி, மோடி ஒரு சர்வாதிகாரச் சூழலில் உருவானார். ராகுல் காந்தி உறுதியான மற்றும் துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் தனது பாட்டி இந்திரா காந்தியின் குணநலன்களைக் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி தனது இருப்பைத் தக்க வைக்க போராடி வருகிறது என்ற கருத்து சரியல்ல. கட்சி அவ்வாறு எப்போதும் இருந்ததில்லை. இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கடந்த 1977ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வடைந்த வேளையில் கூட கட்சி தனது இருப்பைத் தக்க வைக்கப் போராடுவதாகவே அனைவரும் கூறினார். ஆனால் கட்சி இரண்டரை ஆண்டுகளிலேயே மீண்டெழுந்தது. காங்கிரஸýக்கு அப்படி ஒரு பாரம்பரிய சிறப்புத்தன்மை உள்ளது என்றார் மொய்லி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT