இந்தியா

ரயில்வே கேன்டீன் ஊழல் வழக்கில் லாலு குடும்பத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் இணைப்பு

Raghavendran

பீகாரைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசின் ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தார். 

அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி 2006 ரயில்வே கேன்டீன் ஒப்பந்தத்தில் தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்றுக்கு பயணளிக்கும் விதமாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
 
அந்த சமயத்தில் ரயில்வே கேன்டீன்களில் குறிப்பிட்ட தனியார் ஹோட்டலுக்கு ஒப்பந்தம் வழங்குவது தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இதன்காரணமாக லாலு பிசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 

இந்த வழக்கு விசாரணைக்கு இவர்கள் அனைவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து காலம் அவகாசம் வழங்கும்படி லாலு பிரசாத் யாதவ் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலைியல், இந்த வழக்கில் பணமோசடி செய்து வாங்கப்பட்டதாகக் கூறப்படும் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தையும் இணைத்து அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT