இந்தியா

குஜராத்தில் தோல்வியை உணர்ந்ததால் சிறுபான்மையினரை மகிழ்விக்கும் காங்கிரஸ்

DIN

குஜராத்தில் தனக்கு தோல்வி ஏற்படப் போவதை உணர்ந்துள்ள காங்கிரஸ் தற்போது மீண்டும் சிறுபான்மையினரை மகிழ்விக்கும் அரசிலில் ஈடுபட்டு வருவதாக பாஜக தலைவர் அமித் ஷா குறைகூறினார்.
இது தொடர்பாக அவர் ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் இங்கு முதலில் ஜாதி அரசியலில் ஈடுபட்டது. முதல் கட்டத் தேர்தலுக்கு 2, 3 தினங்களுக்கு முன்பு, தங்கள் தோல்வி உறுதி என்பதை உணர்ந்து மீண்டும் சிறுபான்மையினரை மகிழ்விக்கும் அரசியில் அக்கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக மணிசங்கர் அய்யர் பயன்படுத்திய வார்த்தைகளோடு அக்கட்சி தாக்குதலைத் தொடங்கியது. தற்போது வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்குத் தெரியாமல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மணிசங்கர் ஐயர் ஆகியோர் பாகிஸ்தான் தூதரை மூன்று மணிநேரம் வரை சந்தித்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் சந்திப்புக்கான காரணத்தை என்னால் யூகிக்க முடியவில்லை. இந்தச் சந்திப்புக்கு மறுநாள், பிரதமருக்கு எதிராக அவதூறான வார்த்தையை மணிசங்கர் ஐயர் பயன்படுத்தினார். 
குஜராத் கலவர விவகாரத்தில் காங்கிரஸூக்கு ஆதரவான அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓ-க்கள்) எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது இந்த நாட்டுக்கே தெரியும்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான சரண் சிங், தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, குஜராத் கலவரத்துக்கு மன்னிப்பு கோருவதற்காக பிரதமர் ஜாமா மசூதிக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக அவர் இப்படிப் பேசுகிறார்.
தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானியைப் பொறுத்த வரை அவர் ராகுல் காந்தியைச் சந்தித்த பிறகு அவருக்கு வட்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேவானி, மதவாத அமைப்பான பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியாவின் சார்பு அமைப்பிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT