இந்தியா

அரசியல் எதிரிகள் மீது நம்ப முடியாத கட்டுக்கதைகளை மோடி கூறுவது ஏன்?: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கேள்வி

DIN

அரசியல் எதிரிகள் மீது நம்ப முடியாத மற்றும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளை பிரதமர் நரேந்திர மோடி கூறுவது ஏன்? என்று பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் தூதரை சந்தித்துப் பேசியதாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். இது ஒரு சதியாலோசனைக் கூட்டம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் இந்தக் கருத்து தொடர்பாக பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, டுவிட்டர் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
பிரதமர் அவர்களே! தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அதுவும் கடைசிக் கட்டத்தில், அரசியல் எதிரிகளுக்கு எதிராக புதிய, ஆதாரமற்ற மற்றும் நம்ப முடியாத கட்டுக்கதைகளை நாள்தோறும் கூறி வருவது அவசியமா? தற்போது அவர்களை (காங்கிரஸ் தலைவர்கள்), பாகிஸ்தான் தூதருடன் சம்பந்தப்படுத்துவதா?
புதிய கட்டுக்கதைகளைக் கூறுவதற்குப் பதிலாக, வீட்டுவசதி, வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சுகாதாரம், வளர்ச்சி முன்மாதிரி ஆகியவை தொடர்பாக நாம் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் நேரடியாகச் சென்று பேசுங்கள். 
மதவாதச் சூழலை ஏற்படுத்துவதை நிறுத்தி விட்டு, ஆரோக்கியமான அரசியலுக்கும், ஆரோக்கியமான தேர்தலுக்கும் திரும்பி வாருங்கள். ஜெய் ஹிந்த்! என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT