இந்தியா

14 கோடி பான் அட்டைகள் ஆதாருடன் இணைப்பு

DIN

இதுவரை 14 கோடி பான் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாட்டில் 33 கோடி பேர் பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டைகள் வைத்துள்ளனர். இதேபோல, 115 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 14 கோடி பான் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, 41 சதவீத பான் அட்டைகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பான் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு வருகின்றன என்றார் அந்த அதிகாரி.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதேபோல, புதிதாக பான் அட்டை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த சட்டப் பிரிவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அதன் அமலாக்கத்தில் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆதார் தொடர்பான தனியுரிமை விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்கும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கு டிச.31-ஆம் தேதி வரை காலக் கெடு அளிக்கப்பட்டிருந்தது. அதனை, அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT