இந்தியா

ரூ.600 கோடியைத் தாண்டும் விராட் & அனுஷ்காவின் சொத்து பட்டியல்! இவர்களது சம்பளம் எவ்வளவு தெரியுமா?

DIN

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் உள்ள அனைவரும் அதிகம் பேசுவது, படிப்பது, பார்ப்பது எல்லாம் விராட் மற்றும் அனுஷ்காவின் திடீர் திருமணம் மற்றும் அவர்களது காதல் பற்றியும் தான். இருவருமே அவரவர் துறையில் உச்ச நட்சத்திரங்கள் என்பதால் இவர்களது சொத்து மதிப்பு பற்றி பலரும் யோசித்து இருப்பீர்கள். இனி அந்தச் சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். இதோ, இதுதான் இவர்கள் இருவரது இன்றைய சொத்து விவரம்!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். முதன்முதலில் ஒரு பிரபல ஷாம்பு விளம்பரத்தில் இணைந்து நடித்த இவர்களது நட்பு மெல்ல மெல்லக் காதலாக மாறியது அனைவரும் அறிந்ததே. 

முதலில் விராட் கோலியின் வருமானம் பற்றி பார்ப்போம். இந்திய அணிக்கு என ரன்களை குவிக்கும் வீரரான இவர் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு ரூ.121 கோடி சம்பாதிக்கிறார். அடுத்ததாக விளம்பரங்களில் நடிப்பது மற்றும் விளம்பர தூதராக செயல்படுவதன் மூலம் ஆண்டிற்கு ரூ.42 கோடி பெறுகிறார். அசையும் மற்றும் அசையா சொத்துகளாக இவருடைய சொத்து மதிப்பு ரூ.18 கோடி. மேலும் விராட் 6 சொகுசு கார்களை வைத்திருக்கிறார் அவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.9 கோடி என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இவரின் இன்றைச் சொத்து மதிப்பு ரூ.390 கோடி ஆகும்.

அடுத்ததாக விராட்டின் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் வருமானம். 9 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய வெற்றிப் படமான ‘ரப் நீ பணா டி ஜோடி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூ.5 கோடி, இதைத் தவிர ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு மட்டுமே இவர் ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். இவரிடமும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக ரூ.36 கோடி உள்ளது. இவர் வைத்துள்ள 4 சொகுசு கார்களின் மதிப்பு ரூ.5 கோடி. இவை அனைத்தையும் சேர்த்து அனுஷ்காவின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.220 கோடி.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் விராட் மற்றும் அனுஷ்காவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு இப்போது ரூ.600 கோடி ஆகும். இந்தச் சொத்து விவரங்கள் அனைத்தும் தோராயமாக கணக்கிடப்பட்டவை என்பதால் முழுமையான சொத்து பட்டியல் இன்னும் நீளவும் வாய்ப்புள்ளது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT