இந்தியா

குஜராத் இரண்டாம் கட்டத் தேர்தல்: 68.7% வாக்குகள் பதிவு! 

DIN

அகமதாபாத்: குஜராத்தில் இன்று நடந்து முடிந்துள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை நான்கு மணி நிலவரப்படி 68.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. 

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டபேரவைக்கு டிசம்பர் 9, 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 89 தொகுதிகளுக்கு கடந்த 9–ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், 66.75% வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் எஞ்சியுள்ள 93 தொகுதிகளுக்ககான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் வாக்சுப்பதிவு இன்று காலை 8  மணிக்குத் துவங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவானது மாலை 5 மணிவரை நடைபெற்றது.

இறுதி நிலவரப்படி  68.7 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT