இந்தியா

ஆணுறை விளம்பரங்களுக்கு செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அனுமதி

ஆபாசமின்றி எடுக்கப்படும் ஆணுறை விளம்பரங்களை பகல் நேரங்களில் ஒளிபரப்ப செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Raghavendran

தொலைக்காட்சிகளில் ஆணுறை விளம்பரங்களை காலை 6 முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்ப மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் டிசம்பர் 11-ந் தேதி தடை விதித்தது. 

சில தொலைக்காட்சி சேனல்களில் பகல் நேரங்களில் ஒளிபரப்பப்படும் ஆணுறை விளம்பரங்கள் சிறுவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே விளம்பரச் சட்ட விதி 1994-ன் படி இதற்கு தடை விதித்து உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களிடம் விளக்கம் கேட்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், ஆபாசமில்லாத ஆணுறை விளம்பரங்களை பகல் நேரங்களில் ஒளிபரப்ப செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வியாபார நோக்கங்களுக்காக ஆபாசமான காட்சிகள் இன்றியும், பெண்களை தவறான முறையில் சித்தரிக்காமலும் எடுக்கப்படும் ஆணுறை விளம்பரங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படுகிறது. அதில், அணுறை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விளம்பரங்கள் இருக்க வேண்டும் என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT