முகப்பு
இந்தியா

கோவாவில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த சோனியா: செல்ஃபி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய சோனியா காந்தி, கிறிஸ்துமஸ் விடுமுறையை கோவாவில் கழித்து வருகிறார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:


கோவா: காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய சோனியா காந்தி, கிறிஸ்துமஸ் விடுமுறையை கோவாவில் கழித்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை கடந்த 19 ஆண்டுகளாக வகித்து வந்த சோனியா ஏராளமான போராட்டங்களை சந்தித்தார். 

இந்த நிலையில், தனது மகன் ராகுல் காந்தியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுக்க விரும்பினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு ராகுல் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தீவிர அரசியலில் இருந்து சிறிது ஓய்வு பெற விரும்பிய சோனியா, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை கோவாவில் கழிக்க திட்டமிட்டார். இதற்கு முன்பு, சோனியா எந்த விடுமுறையையும் வெளியூர்களில் கழிக்க திட்டமிட்டதே இல்லை என்பதால் இது மிகச் சிறப்பான விடுமுறையாக அமைந்தது.

டிசம்பர் 26ம் தேதி நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த சோனியா, அங்கு மிகவும் மகிழ்ச்சியாக தனது விடுமுறையைக் கொண்டாடினார். கடற்கரையோரமாக சைக்கிளில் வலம் வந்த சோனியாவை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உரிமையோடு நிறுத்தி சோனியாவுடன் புகைப்படம்  எடுத்துக் கொண்டனர்.

சோனியாவுடன், அவரது மகள் பிரியங்காவும் கோவாவில் விடுமுறையைக் கழித்து வருகிறார். ஜனவரி முதல் வாரத்தில் அவர் புது தில்லி திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியாவுடன் பொதுமக்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →