முகப்பு
இந்தியா

பஞ்சாப்  மற்றும் கோவாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On : 4 பிப்ரவரி, 2017 at 8:15 PM
பகிர்:

புதுதில்லி: பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப்பில்  மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 1145 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்த தேர்தலில்  70 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவா சட்டசபை தேர்தலுக்கு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக  நடந்தது.  மொத்தமுள்ள, 40 தொகுதிகளில் 250 வேட்பாளர்கள், களத்தில் நின்றனர். கோவா மாநிலத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 83 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதனைத் தொடந்து உத்தரகாண்ட், உ.பி, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வரிசையாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.