இந்தியா

நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.

DIN

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு புதன்கிழமை முதல் இந்த அவமதிப்பு வழக்கு விசாரிக்க இருக்கிறது. இந்த வழக்கில் கர்ணன் தானே வாதாட ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ளார்.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு தன்னை இடமாற்றம் செய்வது என்று நீதிபதிகள் நியமனக் குழு எடுத்த முடிவுக்கு கர்ணன் எதிர்ப்புத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி, தனது பணியிடமாற்ற உத்தரவுக்கு கர்ணன் தானே தடை விதித்தார். அதே நாளில், பணியிடமாற்றத்துக்கு அவர் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் கர்ணனுக்கு வழக்கை விசாரிப்பது உள்ளிட்ட நீதிமன்றம் சார்ந்த எந்தப் பணியும் அளிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஒரு வார காலத்துக்குப் பிறகு, மனநெருக்கடி காரணமாகவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டதாக கர்ணன் தெரிவித்தார். இந்நிலையில், அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரியமான தோழி... ஷபானா - ஜனனி!

அரசனில் சிம்புவின் தோற்றம் இதுதான்!

சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி!

பிகார் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல பாடகி?! பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டவர்!

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!

SCROLL FOR NEXT