இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: உச்ச நீதிமன்ற நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகவில்லை!

DIN

புதுதில்லி: நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் உத்தரவுப்படி உச்ச நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்று நேரில் ஆஜராகவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதியான கர்ணன் நீதிமன்ற நெறிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதாகவும் நீதிமன்ற  அவமதிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி அவர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

ஆனால் தான் ஒரு தலித் என்பதால் பழிவாங்கப்படுவதாகவும், தன்னை நேரில் ஆஜராகும் படி வழக்கமான நெறிமுறைகளுக்கு மாறாக நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருப்பது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் எனவும் உச்ச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் ஒன்றையும்  நீதிபதி கர்ணன் எழுதியிருந்தார். மேலும் விரும்பினால் தனது வழக்கை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை செய்யுமாறும் அவர் கோரியிருந்தார்.

இந்நிலையில் நீதிபதி கர்ணன் இன்று நேரில் ஆஜராகவில்லை.  இதனால் அவர் அனுப்பியிருந்த கடிதத்தை நீதிபதிகள் அடங்கிய அமர்வு பதிவு செய்து கொண்டது. மேலும் அவர் ஆஜர் ஆகாததற்கு காரணம் கூறியிருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT