இந்தியா

உ.பி.: 53 தொகுதிகளில் இன்று 4-ஆம் கட்ட தேர்தல்

DIN

உத்தரப் பிரதேசத்தில் 4-ஆவது கட்டமாக 53 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கிறது.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட வாக்குப்பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் 4-ஆவது கட்டமாக 12 மாவட்டங்களில் அடங்கிய 53 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பேரவைத் தொகுதிகளும் இதில் அடங்கும். ஆனால், இந்த தேர்தலையொட்டி, அவர் தனது தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
ரேபரேலி தவிர பிரதாப்கர், கௌசாம்பி, அலாகாபாத், ஜான்சி, லலித்பூர், மஹோபா, ஹமீர்பூர், ஃபதேபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கிய தொகுதிகளிலும் வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது.
680 வேட்பாளர்கள்: 4-ஆம் கட்டத் தேர்தலில் மொத்தம் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1.84 கோடி. இதில் 84 லட்சம் பேர் பெண்கள், 1,032 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில், இந்த 53 தொகுதிகளில் சமாஜவாதி 24, பாஜக 5, பகுஜன் சமாஜ் 15, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருந்தன.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரியின் மகள் ஆராதனா மிஸ்ரா (ராம்பூர் காஸ் தொகுதி), மாநில அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங் (குண்டா தொகுதி), காங்கிரஸ் வேட்பாளர் அதிதி சிங் (ரேபரேலி), பகுஜன் சமாஜ் வேட்பாளர் உத்கர்ஷ் மௌரியா (அஞ்சஹார்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள்: உ.பி.யில் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் முறையே பிப்.27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT