இந்தியா

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் பக்கத்து அறை கைதி 'சயனைடு' மல்லிகா சிறை மாற்றம்!

DIN

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் பக்கத்து அறை கைதியாக இருந்த 'சயனைடு' மல்லிகா என்னும் குற்றவாளி வேறு சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அவருடைய உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில் சசிகலாவின் பக்கத்துக்கு அறையில் அடைக்கப்பட்டுள்ளவர் கொடூர கொலைக்குற்றவாளியான 'சயனைடு'  மல்லிகா. இவரின் இயற்பெயர் கெம்பம்மா. பெங்களூரு அருகேயுள்ள கோயில் ஒன்றின் ரெகுலர் பக்தை இவர். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளின் கஷ்டத்தை அவர்களிடம் பேசி தெரிந்து கொள்வார்.

அப்படி வரும் பக்தர்களில் வசதியுள்ள பணக்கார பெண்களாக பார்த்து ஆறுதலளிக்கும் விதத்தில் அவர்களிடம் மல்லிகா    பேசுவார். மேலும் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகி விடும் எனக் கூறுவார். அதற்குத் தனியாக வர வேண்டும் என்பார். அப்படி வரும் பெண்களுக்கு சயனைடு கலந்த தண்ணீரை கொடுத்து, கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார். 

ஆறு  பெண்களை மல்லிகா கொலை செய்துள்ளார். சயனைடு கலந்து கொலைசெய்ததால், இவர் ‘சயனைடு மல்லிகா’ என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு  பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது

தற்போது சசிகலாவின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுகவிஞர் கருத்து தெரிவித்ததால்  கடந்த வாரங்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து மல்லிகா தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்தார். இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சயனைடு மல்லிகாவை பெலகவியில் உள்ள ஹிண்டல்கா சிறைச்சாலைக்கு மாற்றம் செய்தனர்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு கர்நாடக சிறை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT