இந்தியா

வைகுண்ட ஏகாதசி: திருப்பதிக்குப் போகும் திட்டமிருந்தால் இதைப் படியுங்கள்!

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பதியில் முக்கியப் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN


திருப்பதி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பதியில் முக்கியப் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள் என்பதால், தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பொது தரிசன பக்தர்களின் வசதிக்காக, ஜனவரி 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, முக்கியப் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடைபாதை வழியாக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கான திவ்ய தரசினமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவருமே, நாளை பொது தரிசனம் மூலமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் 9: தீபக்கை நேரலையில் வரைந்து அசத்திய கமருதீன்!

எதிர்பாராத கிளைமேக்ஸ்! மெளனம் பேசியதே தொடர் நிறைவு!

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

SCROLL FOR NEXT