இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதிமாறன் மேல் குற்றசாட்டு பதிவு செய்தல் தொடர்பான மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு!

PTI

புதுதில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் மேல் குற்றசாட்டு பதிவு செய்வது   தொடர்பான மனு மீதான தீர்ப்பை ஜனவரி 17-ஆம் தேதிக்கு  தள்ளிவைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பொழுது பொழுது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு மிரட்டி குறைந்த விலைக்கு விற்க வைத்ததாகவும், அதற்கு பதிலாக அவர்கள் குடும்ப நிறுவனமான சன் குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742.58 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது.

இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாநிதி மாறன் மட்டும் இல்லாது அவருடைய மனைவி, சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் நிறுவன உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டியது. போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது.

சி.பி.ஐ நீதிமன்றத்தில் இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கில் தயாநிதிமாறன் மீது குற்றசாட்டு பதிவு செய்வது தொடர்பான வழக்கில் மனு மீதான தீர்ப்பை ஜனவரி 17-ஆம் தேதிக்கு  தள்ளிவைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT