இந்தியா

தமிழக கலாசாரத்தை எண்ணி பெருமைப்படுகிறோம்: பிரதமர் மோடி புகழாரம்

DIN


புது தில்லி: தமிழக கலாசாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இவ்வளவுப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தும், சிறு வன்முறை கூட ஏற்படவில்லை. ரயில் மறியலின் போது பாதிக்கப்பட்டும் ரயில் பயணிகளுக்குக் கூட, போராட்டக்காரர்கள் உணவுகள் வழங்கி பாதுகாப்பது போராட்டத்துக்கே ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது.

இது குறித்து பிரதமர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது, தமிழக கலாசாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

தமிழக கலாசார விருப்பங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு  உறுதியாக உள்ளது. புதிய உச்சங்களை தமிழகம் அடைய மாநில அரசுடன் தொடர்ந்து இணைந்து பாடுபடுவோம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT