புதுதில்லி: நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரடமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. இதுதொடர்பான மத்திய அரசின் யோசனைக்கு தேர்தல் ஆணையர் கடந்த ஆண்டு தனது ஆதரவைத் தெரிவித்தது.
இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு மத்திய சட்ட அமைச்சகத்திற்கும், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் நசீம் ஜைதி தெரிவித்தார்.
ஒரே சமயத்தில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த மொத்தமாக ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் என்று கடந்த ஆண்டு மே மாதம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.