கவுகாத்தி: இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அசாம் மாநிலத்தில் நான்கு இடங்களில்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அசாமின் தில்புருகர், தின்சுகியா மற்றும் சராய்தியோ ஆகிய மாவட்டங்களில் உள்ள நான்கு இடங்களில் இன்று ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம்பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர், 'இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களினால் எந்த விதமான உயிர் இழப்போ,பொருள் சேதமோ ஏற்படவில்லை. உல்பா தீவிரவாதிகள் குண்டுகளை தனியான இடங்களில் வைத்துள்ளனர். தங்கள் இருப்பை காட்டுவதற்காகவும், அச்சமூட்டுவதற்கும் செய்யப்பட்ட நிகழ்வு இது' என்று தெரிவித்தார்.
முன்னதாக நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறு உல்பா தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.