இந்தியா

விஷவாயு தாக்கி 7 பேர் பலி

தொழிற்சாலை தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 7 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PTI

மும்பை: தொழிற்சாலை தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 7 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லாத்துர் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.டி.சி.,யின் (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) கீர்த்தி ஆயில் தொழிற்சாலையில் உள்ள தொட்டியை சுத்தம் செய்ய சென்றனர். அவர்கள் தொட்டியை சரிபார்க்க கீழே இறங்கி உள்ளனர். அப்போது, தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயரிழந்துள்ளனர். தொட்டியை சுத்தம் செய்யவர்கள் நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை என நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிந்துள்ளது என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT