புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவுக்கு ஒரு துளிக்கூட பயன் இல்லை என்று காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அலங்காரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளதே தவிர, நாட்டு மக்களுக்கு எந்த வித துளி பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் மோடி 64 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய மக்கான், 65 வது பயணமாக இஸ்ரேலுக்கு சென்றுள்ள மோடியின் பயணம் என்ன பயன் தரும் என்பதை இனி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.