இந்தியா

காவிரியில் கழிவுகளை கலக்கிறதா கர்நாடகா?: ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

DIN

புதுதில்லி: காவிரியில் கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த பிரச்சினை தவிர, இரு மாநிலங்களும் காவிரி நீர் விவகாரத்தில் அடிக்கடி கலவரத்தை ஏற்படுத்துகின்றன.

கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் அதிக அளவில் கலக்கின்றன.

குறிப்பாக பெங்களூர் நகரின் 80 சதவீத கழிவுகள், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது என கூறப்படுகிறது.

மோசமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

கர்நாடகம் இதுவரை 5.966 டி.எம்.சி தண்ணீரைக் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு முன்பு தமிழக அரசு முன்வைத்தது. மார்ச் 21 ஆம் தேதி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தினசரி 2000 கனசதுர காவிரி நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஏற்கனவே, இதுதொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய இரு மாநிலங்களுக்கும் பொதுவான நிபுணர் குழு ஒன்றை அமைப்பது குறித்து தமிழ்நாடும், கர்நாடகாவும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையில், காவிரியை கர்நாடகா, மாசுபடுத்துவது தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT