இந்தியா

பிராந்திய மொழிகளில் தரமான கல்வி: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

DIN

பிராந்திய மொழிகளில் அனைத்துப் பாடங்களையும் படிப்பதற்கு தரமான புத்தகங்கள் உள்ளிட்டவை கிடைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்வயம், ஸ்வயம் பிரபா ஆகிய மின்னணு வழிக் கல்வித் திட்டங்களையும் டிஜிட்டல் முறையிலான தேசிய கல்வி ஆவணக்காப்பகத்தையும் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நடைமுறைப்படுத்தும் இக்கல்வித் திட்டத்தில் ஸ்வயம் என்பது முழுவதும் இலவசமாக இணைய வழிக் கல்வியாகும். இணையதளத்தில் விடியோ மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். இதில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் வசதி உள்ளது. ஸ்வயம் பிரபா திட்டத்தில் பயன்பெற ரூ.1,500 செலவில் டிஸ் ஆண்டனாவை நிறுவ வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நமது நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் இளைஞர்களின் திறமைகளை முழுமையாக வெளிக் கொண்டுவர முடியும். நமது நாட்டில் நகரப் பகுதிகளுக்கும், கிராமப் பகுதிகளும் இடையே கல்வித்தரத்தில் மிகுந்த வேறுபாடு உள்ளது. இது தவிர மாநிலங்களுக்கு இடையிலும், ஏன் கல்வி நிலையங்களுக்கு இடையிலும் கூட கல்வித் தரத்தில் வேறுபாடு உள்ளது.
பிராந்திய மொழிகளிலும் அனைத்துப் பாடங்களையும் படிப்பதற்கு தரமான புத்தகங்கள் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பிராந்திய மொழிகளில் பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வியை ஆங்கில மொழியில் கற்கும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். உயர் கல்விக்கான புத்தகங்களும் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கோரி மனு

திருமங்கலம் விவசாயிக்கு இலவச டிராக்டா் -நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

உயா்கல்வி வழிகாட்டுக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT