இந்தியா

அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் நரேஷ் சந்திரா காலமானார்

DIN

புதுதில்லி: பத்மவிபூஷன் விருது பெற்ற அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் நரேஷ் சந்திரா (82) நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கல்லூரிப்படிப்பை முடித்த நரேஷ் சந்திரா, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தேர்வாகி மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். 1990 - 1992 ஆம் ஆண்டில் அமைச்சரவை செயலாளராக பதவி உயர்வு பெற்ற நரேஷ், 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

பணி ஓய்வு பெற்ற அவர் கடந்த வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கோவாவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பித்ததால் நேற்றிரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி நரேஷ் சந்திரா காலமானார்.

தனது பதவிக்காலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள உறவை வலுவாக்கியதால் 2007 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருதை நரேஷ் சந்திராவுக்கு மத்திய அரசு வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT