முகப்பு
இந்தியா

முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களாவில் திடீர் தீ விபத்து

மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா ஆன்டிலியாவில் திடீரென தீப்பற்றியது.

இந்தியா

முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களாவில் திடீர் தீ விபத்து

மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா ஆன்டிலியாவில் திடீரென தீப்பற்றியது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

மும்பை: மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா ஆன்டிலியாவில் திடீரென தீப்பற்றியது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அவருக்குச் சொந்தமான தெற்கு மும்பையில் அட்லாமவுன்ட் ரோட்டில் அமைந்துள்ளது ஆன்டிலியா. இந்த பங்களா 400,000 சதுர அடி உயரமும், 27 தளங்கள் கொண்டதாகும். உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றான ஆடம்பர பங்களா ஆன்டிலியா, ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

இதன் 9 வது தளத்தில், நேற்றிரவு 9.04 மணியளவில் திடீரென தீப்பற்றியது. தகவலின்பேரில் 9.13 மணியளவில் 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

பங்களாவில் தோட்டம் இருக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 4G மொபைல் டவரில் தீப்பற்றியதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து குறித்து மும்பை தலைமை தீயணைப்பு அதிகாரி பிரபட் ரஹங்க்டேல் கூறுகையில், தீயின் தீவிரம் மிகவும் குறைவாக இருந்ததால், பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடனும் தீயின் தீவிரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் கூறினார்.

"ஒன்பதாவது தளத்தில் அமைக்கப்பட்டிருந்த 4G  மொபைல் டவரில் பிடித்த தீயை அணைக்க, 3 தீயணைப்பு வாகனங்கள், 2 ஏணிகள் பொறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ஒரு தண்ணீர் டாங்கர்கள் பயன்படுத்தப்பட்டன என்று ரஹங்க்டேல் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →