இந்தியா

அமர்தாத் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

DIN

புதுதில்லி: அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவுகளில் அவர் தெரிவித்திருப்பதாவது:

ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்டுள்ளகொடூரத் தாக்குதலால் நான் அடைந்த வேதனைகளை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. இதுதொடர்பாக ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர்களிடம் தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு அளிக்கும் என்று உறுதியளித்தேன். இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாக்குதல் சம்பவம் தொடர்பான முழு விவரங்களை முதல்வர், ஆளுநரிடம் ராஜ்நாத் சிங் கேட்டார். மேலும், அமர்நாத் யாத்திரைக்கு தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதேபோல், பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லியும், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது, பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியை மேலும் அதிகரிக்கச் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT