இந்தியா

மகாராஷ்டிராவில் மாயாஜாலம்: உச்ச நீதிமன்ற தடைக்குப் பிறகும் மதுபான விற்பனை வருவாய் உயர்வு

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்தத் தடையால் பல மாநிலங்களில் மதுபான விற்பனையும், வருவாயும் சரிவடைந்தது.

ENS


மும்பை: நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்தத் தடையால் பல மாநிலங்களில் மதுபான விற்பனையும், வருவாயும் சரிவடைந்தது.

ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தின் கலால் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கை வேறுமாதிரியாக உள்ளது. அதாவது, உச்ச நீதிமன்றத் தடையால், அம்மாநிலத்தின் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயானது குறையாமல் உயர்ந்திருக்கிறது.

மதுபான விற்பனை மற்றும் வருவாய் குறித்த அறிக்கையில், ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர மாநிலத்தின் வருவாய் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு சரிவடைந்தது. அதே சமயம், நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,800 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பெற்ற வருவாய் ரூ.2,640 கோடியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 15,500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன். இதனால் மதுபான விற்பனையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டது. 

அதாவது, 65% மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் நாங்கள் எதிர்பார்த்ததை விட, வருவாய் ஓரளவுக்குத்தான் சரிந்துள்ளது என்று கூறியுள்ளார் கலால்துறை அமைச்சர் சந்திரஷேகர் பவன்குலே.

மேலும், நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், இயங்கி வந்த மதுபானக் கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்ததே, வருவாய் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT