இந்தியா

கேரளம்: கலாம் நினைவு அருங்காட்சியகம் இன்று திறப்பு

DIN

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக, கேரளத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் வியாழக்கிழமை (ஜூலை 13) திறக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அப்துல் கலாமின் நினைவாக விண்வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாம் ஸ்மிருதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அறிவியல் அருங்காட்சியகமானது, பல்வேறு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த அருங்காட்சியகத்தில் அப்துல் கலாமின் சாதனைகளைப் போற்றும் வகையிலான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. கலாமின் பல்வேறு அரிய புகைப்படங்கள், அவரால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டுகள், செயற்கைகோள்களின் மாதிரிகள் மற்றும் அவரது பொன்மொழிகள் ஆகியவையும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அருங்காட்சியத்தை திறந்து வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT