இந்தியா

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எண்ணும் பணி தொடர்கிறது: உர்ஜித் படேல்

மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எண்ணுவதற்காக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஊழியர்களுக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல்

DIN

மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எண்ணுவதற்காக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஊழியர்களுக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு புதன்கிழமை ஆஜரானபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள அந்த பழைய நோட்டுகளை வங்கி, அஞ்சல் நிலையங்களில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பொதுமக்கள் டெபாசிட் செய்த பணம் அனைத்தும் இப்போது ஆர்பிஐ வசம் சென்றுள்ளது.
அவற்றை முழுமையாகக் கணக்கிட்டு, திரும்பப் பெறப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பை அறிந்து கொள்ளும் நோக்கில் ஆர்பிஐ ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். சனிக்கிழமைகளிலும் பிற அரசு விடுமுறை நாள்களிலும் நோட்டுகளை எண்ணும் பணி தொடர்கிறது. இதற்காக ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரங்களும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT