இந்தியா

பிரதமர் மோடியை கிண்டல் செய்து 'மீம்' வெளியிட்ட குழுவினர் மீது வழக்கு!

DIN

மும்பை: பிரதமர் மோடியை கிண்டல் செய்து பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் 'மீம்' வெளியிட்ட நகைச்சுவை குழுவினர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் இருந்து செயல்படும் ‘ஆர் இந்தியா பக்சோட் (ஏஐபி)’ என்ற நகைச்சுவை குழுவினர் டுவிட்டரில் கணக்கு ஒன்று வைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் நகைச்சுவைக்காக பிரபலங்களின் புகைப்படங்களை அவ்வப்பொழுது மாற்றி பதிவு செய்து வந்தனர்.

அந்தவகையில்  பிரதமர் மோடி பற்றி அவர்கள் வெளியிட்ட 'மீம்ப' ஒன்று தற்பொழுது சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த படத்தில் அவர்கள் 'ஸ்னாட்சாட்' என்ற செயலி மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நாயின் முகத்துடன் இணைத்து மீம் உருவாக்கி பதிவு செய்திருந்தனர்.

இது டிவிட்டர் பயனாளர்கள் மூலம்  வைரலாகப் பரவ, உடனடியாக சிலர் மும்பை போலீசுக்கு தகவல் பலர் இது குறித்து கண்டனம் தெரிவிக்கவும், தாங்கள் பதிவிட்ட குறிப்பிட்ட அந்த மீமை ஏஐபி குழுவினர் நீக்கி விட்டனர்.

ஆனாலும் ஏஐபி குழுவினர் மீது தற்பொழுது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT