இந்தியா

அமர்நாத் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

DIN

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து பஹல்காம் எனுமிடத்தில் வந்தபோது நிலைதவறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அப்பேருந்தில் பயணம் செய்தவர்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதை நினைத்து வேதனை அடைகிறேன். இந்த கோர விபத்தில் பலியான யாத்ரீகர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் இறைவனிடம் வேண்டுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT